Sunday, October 19, 2014

தமிழ் நாட்டில் பெண்கள் நலத்திட்டங்கள் - துவங்கப்பட்ட வருடங்கள்:
  • தமிழ்நாட்டில் பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கப்பட்ட ஆண்டு - 1989
  • மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம் 1989
  • அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம் - 1989
  •  டாக்டர் முத்துலெட்சுமி நினைவு மகப்பேறு நிதி உதவித் திட்டம்  - 1989
  • டாக்டர் தருமாம்பாள் நினைவு விதவை மறுமணத் திட்டம் - 1975
  • அனைத்து மகளிர் காவல் நிலையம் - 1992
  • காவல் துறையில் பெண்களை நியமனம் செய்யும் திட்டம் - 1973
  • அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் திட்டம்  - 1990
  • பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் - 1992
  •  பெண் கொடுமை சட்டம்  - 2002

இதர செய்திகள் 
இந்த ஆண்டு முதல் (2013) திருமண நிதியுதவித் திட்டங்களில் பயன்பெற குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு 24,000 ரூபாயிலிருந்து 72,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவான பெண் குழந்தைகள் பெயரில் 1,500 ரூபாய்க்கான வைப்புத் தொகை பத்திரங்கள் வழங்கப்பட்டன. பின்னர் 2001 ஆம் ஆண்டு இத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. இதன்படி, ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால், அப்பெண் குழந்தையின் பெயரில் 22,200 ரூபாய் வைப்புத் தொகையும், இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் தலா 15,200 ரூபாயும் வைப்பீடு செய்யப்பட்டது. இந்தத் தொகை 20 ஆண்டுகள் கழித்து வட்டியுடன் திருப்பி அளிக்கப்படும். தற்போது இந்தத் தொகை முறையே 50,000 ரூபாய் என்றும், 25,000 ரூபாய் என்றும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 
மாண்பு மிகு முதல்வர் அவர்கள் செப்டம்பர் 2013 ல் திருமண நலத்திட்டங்களில் பயன்பெற குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ.24 ஆயிரத்திலிருந்து, ரூ.72 ஆயிரமாக உயர்த்தி ஆணையிட்டுள்ளார்

No comments:

Post a Comment