சமீபத்திய செய்திகள் - அக்டோபர் - 2014
அமைதிக்கான் நோபல் பரிசு 2014 - இந்திய சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி, பாக். சிறுமி மலாலாவுக்கு வழங்கப்படவுள்ளது.
தில்லியில் வசித்து வரும் 60 வயதான கைலாஷ் சத்யார்த்தி, 1990 முதல் குழந்தை தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அவரது சேவையின் மூலம் இதுவரை 80 ஆயிரம் குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.
பச்பன் பச்சாவோ அந்தோலன் என்ற அமைப்பை துவக்கி கைலாஷ் சத்யார்த்தி நடத்தி வருகிறார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா, பெண் கல்விக்காக போராடி வருபவர்.
நோபல் பரிசு வென்ற இந்தியர்கள்: தாகூர் முதல் கைலாஷ் வரை (நன்றி தினமணி)
இந்தியக் குடிமக்கள்
மகாகவி ரவீந்திரநாத் தாகூருக்கு, இலக்கியத்துக்கான நோபல் பரிசு 1913-இல் வழங்கப்பட்டது. இதுவே இந்தியர் ஒருவருக்குக் கிடைத்த முதல் நோபல் பரிசு.
தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி சர் சி.வி.ராமனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு 1930-ஆம் ஆண்டில் அளிக்கப்பட்டது.
அல்பேனியாவில் பிறந்து, இந்தியக் குடியுரிமை பெற்றவரான அன்னை தெரசாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு 1979-இல் வழங்கப்பட்டது.
அமார்த்யா சென்னுக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 1998-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
கைலாஷ் சத்யார்த்திக்கு அமைதிக்கான நோபல் பரிசு, இந்த ஆண்டு (2014) அறிவிக்கப்பட்டுள்ளது
வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள்
இந்தியாவில் பிறந்து, அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற ஹர்கோவிந்த் குரானாவுக்கு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு 1968-இல் வழங்கப்பட்டது.
இந்தியாவில் பிறந்து, அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற சுப்பிரமணியன் சந்திரசேகர், இயற்பியலுக்கான நோபல் பரிசை 1983-இல் வென்றார்.
இந்தியாவில் பிறந்து, பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் குடியுரிமை பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் 2009-இல் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றார்.
இந்தியாவில் பிறந்து, பிரிவினைக்குப் பின் பாகிஸ்தானியரான அப்துஸ் சலாமுக்கு 1979-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இந்தியாவில் பிறந்து, பிரிவினைக்குப் பின் முதலில் பாகிஸ்தானியராகவும், பின்னர் வங்கதேச நாட்டினராகவும் ஆன முகமது யூனுஸýக்கு 2006-இல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இந்தியாவில் பிறந்த வெளிநாட்டினர்
இந்தியாவில் பிறந்த, பிரிட்டிஷ் குடிமகனான ரொனால்டு ராஸýக்கு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு 1902-இல் வழங்கப்பட்டது.
இந்தியாவில் பிறந்த, பிரிட்டிஷ் குடிமகனான ரூட்யார்டு கிப்ளிங், இலக்கியத்துக்கான நோபல் பரிசை 1907-இல் பெற்றார்.
இந்தியாவில் வாழ்பவர்
திபெத்தைச் சேர்ந்த புத்த மதத் தலைவரான தலாய் லாமா, இந்தியாவில் கடந்த 1959 முதல் வசித்து வருகிறார். இவருக்கு 1989-இல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நார்வே, பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு பயணம்மேற்கொள்கிறார்.இந்த 6 நாள் பயணத்தில் பின்லாந்தின் ஆர்க்டிக் பகுதியில் உள்ள கிராமத்துக்கு பிரணாப் செல்ல இருக்கிறார். ஆர்க்டிக் பகுதிக்கு செல்லும் முதல் இந்திய தலைவர் பிரணாப்தான். அதேபோல நார்வே செல்லும் முதல் இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிதான்.
சான்சாத் ஆதர்ஸ் கிராம் யோஜனா(Saansad Adarsh Gram Yojan) - 11-10-2014 அன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. ஜெய் பிரகாஸ் நாராயணனின் பிறந்த தினத்தில் துவக்கி வைக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் நோக்கம் கிராம சுயராஜ்யத்தை மேம்படுத்துவதாகும். இத்திட்டம் மத்திய ஊரக வளர்ச்சித்துறையால் நிறைவேற்றப்பட உள்ளது.
தேசிய மன நலக் கொள்கை (National Mental Health Policy of India) 10.10.2014 அன்று மத்திய சுகாதார அமைச்சரால் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய மன நலச்சட்டம் 1987 ஆம் இயற்றப்பட்டது.
UNICEF (United Nations International Children's Emergency Fund ) தெற்கு ஆசியாவிற்கான நல்லெண்ண தூதுவராக பாலிவுட் நடிகர் அமீர்கான்நியமிக்கப்பட்டுள்ளார்.
A Man and a Motorcycle என்ற ஆப்கானிஸ்தானின் ஹமித் ஹர்சாய் பற்றிய புத்தகத்தின் ஆசிரியர் - பெற்றி டேம் (Bette Dam)
இலக்கியத்திற்கான நோபல் பரிசு 2014 - பிரஞ்சு எழுத்தாளர் பேட்ரிக் மோடியானா என்பவருக்கு வழங்கப்படுகிறது.
உலக அஞ்சல் தினம் - அக்டோபர் 9
Indian Air Force Day - அக்டோபர் 8
2014-ஆம் ஆண்டுக்கான "லால் பகதூர் சாஸ்திரி தேசிய விருது' - பொது நிர்வாகம், கல்வி, மேலாண்மை ஆகியவற்றில் சிறப்பாகப் பணியாற்றி வருவதற்காக வழங்கப்படும் இவ்விருது இவ்வாண்டு இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சித் துறையின் விஞ்ஞானி டாக்டர் சிவதாணு பிள்ளைக்கு வழங்கப்பட்டது.
இஸ்ரோவின் முதல் ஏவுகணையான எஸ்.எல்.வி.3 மற்றும் பி.எஸ்.எல்.வி. பிரம்மோஸ், பிருத்வி, நாக், ஆகாஷ் ஏவுகணை தொழில் நுட்பத்தில் சிவதாணு பிள்ளை முக்கிய பங்காற்றியுள்ளார். பிரம்மோஸ் ஏவுகணையின் தந்தை என்றும் அவர் அழைக்கப்படுகிறார். இந்த விருதை பெறும் 15-வது நபர் என்ற பெருமையையும் சிவதாணு பிள்ளை பெற்றுள்ளார்.
2014 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி முழு சந்திர கிரகணம் 08-10-2014 அன்று நிகழ்ந்தது. இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி நடைபெற்றது.
சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அப்போது, பூமியின் நிழல் சந்திரனில் விழுவதால், சந்திரன் பிரகாசம் குறைந்து கருஞ்சிவப்பாக காட்சியளிக்கும்.
கட்டைகளால் அடித்துக்கொள்ளும் வினோத திருவிழா- ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் தேவரகட்டா பகுதியில் ஆண்டுதோறும் தசரா விழாவின் போது மல்லேஸ்வர சுவாமி கோயிலில் நடைபெறும் கல்யாண உற்சவத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று இரு கோஷ்டிகளாக பிரிந்து கட்டைகளால் தாக்கிக் கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட சாமியை தரிசிகும் விழா நடைபெறுகிறது.
சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியின் ஹனுமன் காட் பகுதியில் இருக்கும் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் வாழ்ந்த வீட்டை அம்மாநில அரசின் சுற்றுலா வரைபடத்தில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்த பா.ஜ.க மாநிலங்களவை உறுப்பினர் - தருண் விஜய்.
உலகின் கருப்பை மாற்று சிகிச்சையின் மூலம் பிறந்த முதல் குழந்தை ஸ்வீடன் நாட்டில் பிறந்தது.
உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4
17–வது ஆசிய விளையாட்டு போட்டி - முக்கிய தகவல்கள்
தென் கொரியாவின் இன்சியான் நகரில் 20-09-2014 முதல் 04-10-2014 வரை நடைபெற்றது
45 நாடுகளை சேர்ந்த வீரர்– வீராங்கனைகள் பங்கேற்றனர்.
சீனா 342 பதக்கங்களுடன் முதலிடத்திலும், தென் கொரியா 234 பதக்கங்களுடன் 2-வது இடத்தையும், ஜப்பான் 200 பதக்கங்களுடன் 3-வது இடத்தையும், கஜகஸ்தான் 84 பதக்கங்களுடன் 4-வது இடத்தையும், ஈரான் 21 தங்கம் உள்பட 57 பதக்கங்களுடன் 5-வது இடத்தையும் பிடித்தன.
இந்தியா 11 தங்கம், 9 வெள்ளி, 37 வெண்கலம் என 57 பதக்கங்கள் பெற்று 8-வது இடத்தைப் பிடித்தது.
மொத்தம் 28 விளையாட்டில் பங்கேற்ற இந்தியா 14 விளையாட்டுகளில் பதக்கங்களை பெற்று பதக்கப்பட்டியலில் இந்தியா .
இதில் தடகளத்தில் 2 தங்கம், கபடியில் 2 தங்கம், ஸ்குவாஷ், துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், டென்னிஸ், வில்வித்தை, குத்துச்சண்டை, ஆக்கியில் தலா ஒரு தங்கம் வென்றது.
அதிகபட்சமாக தடகளத்தில் 13 பதக்கங்கள் (2 தங்கம், 4 வெள்ளி, 7 வெண்கலம்) பெற்றது. அதற்கு அடுத்தப்படியாக துப்பாக்கி சுடுதலில் 9 பதக்கங்கள் (1 தங்கம், 1 வெள்ளி, 7 வெண்கலம்) வென்றது.
ஆக்கியில் 16 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா தங்கம் வென்றது. இதன்மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது.
ஆண்கள் கபடி அணி தொடர்ந்து 7–வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.
பெண்கள் 4*400 தொடர் ஓட்டத்தில் இந்திய அணி 3 நிமிடம் 28.98 வினாடியில் கடந்து புதிய சாதனையுடன் தங்கம் வென்றது.
முதல் தங்கம் துப்பாக்கி சுடுதல் வீரரான ஜிது ராய் பெற்றார்.
மல்யுத்தத்தில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கப் பதக்கம் வென்று தந்தவர்- யோகேஷ்வர் தத்
கடந்த 2010–ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டில் இந்தியா 14 தங்கம், 17 வெள்ளி, 34 வெண்கலம் என 65 பதக்கங்கள் பெற்றது. கடந்த முறையைவிட இந்த தடவை 8 பதக்கங்கள் குறைந்து உள்ளது.
அடுத்த ஆசிய விளையாட்டு போட்டி 2018–ம் ஆண்டு இந்தோனேசியாவில் ஜகார்த்தாவில் நடக்கிறது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தனக்கு வழங்கப்பட்ட வெண்கலப்பதக்கத்தை ஏற்க மறுத்த இந்திய குத்துச்சண்டை வீராங்கனை - சரிதா தேவி
மகாத்மா காந்தியடிகளின் 145-வது பிறந்தநாளான அக்டோபர் 2-ஐ முன்னிட்டு, அவரது சுயசரிதையான "சத்திய சோதனை' நூலின் பஞ்சாபி, காஷ்மீரிமொழியாக்கங்கள் காந்தியடிகளால் நிறுவப்பட்ட நவஜீவன் அறக்கட்டளையால் வெளியிடப்பட்டன.
Internet.org summit என்கிற இணைய மாநாடுஅக்டோபர் 09, 10 தேதிகளில் புது தில்லியில் நடக்கவிருக்கிறது. இதில் facebook நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் பங்கேற்கவிருக்கிறார்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் (இ.பி.எஃப்) சார்பில் குறைந்தபட்சம் ரூ.1,000 ஓய்வூதியமாக வழங்கும் திட்டம் நாடு முழுவதும் 30-09-2014 முதல் அமல்படுத்தப்படுகிறது. இந்தியாவில் தொழிலாளர்கள் ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1995.
28-09-2014 அன்று மரணமடைந்த சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங்கின் இளைய சகோதரி -பிரகாஷ் கெபர்
No comments:
Post a Comment