Monday, November 3, 2014

ஜப்பானின் உயரிய தேசிய விருதுக்கு மன்மோகன்சிங் தேர்வு!

புதுடெல்லி: ஜப்பான் நாட்டின் மிக உயரிய விருதாக கருதப்படும் தேசிய விருதுக்கு இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ஜப்பான் தூதரகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ''கடந்த 35 ஆண்டுகளாக இந்திய-ஜப்பான் இடையேயான உறவுகளை விரிவாக்கம் செய்யவும், நட்புறவை அதிகரிக்கவும் மன்மோகன் சிங் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செலுத்தியுள்ளார்.

எனவே, அவருக்கு 'தி கிராண்ட் கார்டன் ப் தி ஆர்டர் ஆப் தி பவுலோனியா ப்ளவர்ஸ்' என்ற விருது வழங்கப்படுகிறது. ஜப்பானின் 'உயரிய தேசிய விருது' மற்றும் உயர்ந்த மரியாதை கொண்ட விருது தனி பங்களிப்புக்காக அளிக்கப்படுகிறது. இவ்விருதினை பெரும் முதல் இந்தியர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்'' எனக் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், ''உண்மையிலேயே நான் கவுரவிக்கப்பட்டு இருக்கிறேன். ஜப்பான் மக்கள் மற்றும் அரசாங்கம் என் மீது பொழியும் அன்பு மற்றும் பாசத்திற்கும் பணிகிறேன்'' என்றார்.

No comments:

Post a Comment